புதன், 25 ஏப்ரல், 2012

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு


சங்கப்பரிவார கும்பல்களின் மாணவர் பிரிவான "அகில பாரதிய வித்யார்த் பரிஷத்" ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர‌ மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் குற்றஞ்சாட்டியுள்ளார். சங்கப்பரிவார்களின் தீர்மானங்களை ஏ.பி.வி.பி செயல்படுத்தி வருவதாகவும், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவி வரும்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம் - நூற்றுக்கணக்கானவர்கள் கைது!

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த‌ இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கண்டன உரை நிகழ்த்தும் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம்



சம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ஜும்மா பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதமரின் திமிர் அறிக்கை!

24 ஏப்ரல், 2012


கொழும்பு: இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
dambulla-mosque60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும் முயற்சியை நிறுத்தாவிட்டால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் என்று நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை தம்புள்ளையில் உள்ள மஸ்ஜித் மீது வெடிக்குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மறு நாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்காக சென்றபோது புத்த பிக்குகள்(சாமியார்கள்) அராஜகமாக தடுத்தனர். ‘மஸ்ஜிதை மூடாவிட்டால் இடிப்போம்’ என மிரட்டல் விடுத்தனர்.

தம்புள்ளை பகுதி, புத்தர்களின் புனித இடம் என்று கடந்த 1982-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் ஏதும் கட்டப்படக் கூடாது; இங்கு அனுமதியில்லாமல் மஸ்ஜித் கட்டப்பட்டிருக்கிறது என்று புத்த பிக்குகள் திமிர்த்தனமாக கூறிவருகின்றனர்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?

Post image for இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)
அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. (98:5)
அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (27:62)
பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது. (39:44)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.

இடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்!

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய ஐந்து மண்டலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கோவை
 
 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்
தலைவர்கள் கோசமிடும்போது எடுத்த படம்

இலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.

இலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால சேதப்படுத்தப்பட்டுள்ளது. இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகளால் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறபு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதுதான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்த இலங்கை ராஜபக்ஷே அரசின் இனவெறியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

Post image for இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காபடைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

திரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக்கை!




பட்டி தொட்டி எங்கும் பாமரன் முதல் பட்டணத்தில் இருக்கும் பட்டதாரிகள் வரை அனைவரையும் தன் வசம் வைத்திருப்பது தான் திரையுலகத்துறை. அப்பேற்பட்ட திரைத்துறையின் சாதனைகளில் சில,

1. மூடப்பழக்கவழக்கங்களில் சிக்குண்ட மூதாதையர்களின் மெளட்டீகங்களை அடையாளபப்டுத்தும் பகுத்தறிவு கண்ணை  திறந்தது தான் திரைத்துறை என்பதை காலத்தின் ஓட்டத்தில் நாம மறந்து விடக்கூடாது.

2. வரலாற்று நாயகர்களை நேரில் பார்க்காத மக்களுக்கு அவர்களை நமது மனக்கன் முன் கொண்டு வந்து நிறுத்தியது திரைத்துறை தான்.

3. கலாச்சார சீரழிவுகள் கட்டுண்டு மனம் போன போக்கில் வாழும் மானுடரை மாற்றி அமைத்து மனிதனாய் வாழ வழி சொல்லியது தான் திரைத்துறை.

நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வந்தடைந்தது!

சென்னை: தீவிரவாதத்திற்கு எதிராகவும், அப்பாவி இளைஞர்கள்
சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் " நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை" என்ற தலைப்பில் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 12ம் தேதி புதுடெல்லி பட்லா ஹவுஸில் தொடங்கிய இந்த பிரச்சார யாத்திரை உத்திரபிரதேசம், போபால், மஹாராஷ்டிரா, கர்நாடகா வழியாக கடந்த 19ஆம் தேதி சென்னை வந்தடைந்தது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற்ற பின்பு, அன்று மாலை 7 மணியளவில் சென்னை மண்ணடியிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தில் என்.சி.ஹெச்.ஆர்.ஓ சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சனி, 21 ஏப்ரல், 2012

எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.

எச்ச‌ரிக்கை:இந்த‌க் க‌ட்டுரை ப‌டிப்ப‌த‌ற்கு, ப‌கிர்ந்துகொள்வ‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌. அம‌ல் ப‌டுத்துடுவ‌த‌ற்கு. இன்றே... இப்போதே...


எதிரிக‌ளை அவ‌ர்க‌ளைப் போன்றே ஆயுத‌ங்க‌ளை ஏந்தி எதிர்த்த‌ன‌ர். இறையுத‌வி, பெருமானார் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் த‌லைமை, ம‌ற்றும் ஈமானின் உறுதியின் உத‌வியால் ம‌ன‌தில் எந்த‌ வித‌ அச்சமுமின்றி போர்க்க‌ள‌த்தில் குதித்த‌ன‌ர். உல‌க‌ வ‌ர‌லாற்றில் ஈடியிணைய‌ற்ற‌ வெற்றிக‌ளை குவித்த‌ன‌ர். இஸ்லாத்தின் நெறிக‌ளை எந்த‌ நேர‌த்திலும், க‌ழுத்திற்கு க‌த்தி வ‌ந்த‌ நேர‌த்திலும் அவ‌ர்க‌ள் மீறிய‌தில்லை.

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.

கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
 கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
 * குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...?
 * கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..?
 * குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..?
 * குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?
 * வரவு, செலவை வரையறுப்பது எப்படி..?     

அரசியல் சட்டமா? அல்லாஹ்வின் சட்டமா?

தப்ஸீர் மஜ்லிஸில் ஹஸரத் இஸ்மாயில் அவர்களின் பயானிற்கு பின்னால் ஆற்றிய உரை.

அரசியல் சட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வினால் ஏற்படுத்திய சட்டம் உலகம் அழியும் வரை மறாது. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்திய சட்டம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும் அற்புதம். உதாரணத்திற்கு வருமான வரி சட்டம்.