வியாழன், 13 பிப்ரவரி, 2014

இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு

கோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8,2005),குலாம் ரசூல் வென்கர் மற்றும் தாஹிர் ரசூல் ஆகியோரால் 1957-இல் வட ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது .அஹ்மத் தீதாத் அவர்கள் இந்தியாவில் பாம்பே- சூரத் பகுதியில் இருந்த தட்கேஷ்வர்(பிரிட்டிஷ் ஆட்சி காலம்) என்ற ஊரில் 1918-இல் பிறந்து பிறகு தன்னுடைய 9-வது வயதில் வட ஆப்ரிக்காவிற்கு குடிபுகுந்தார். அவர் இஸ்லாமிய அழைப்பு பணியில் முன்னுதாரணமாக விளங்கினார்.உலகம் முழுவதும் இஸ்லாத்தை எடுத்து வைத்தார்.கிறிஸ்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதில் தனித்துவம் வாய்ந்த முறையை கையாண்டார்.அன்னாரின் வாழ்கை வரலாறு அதிகாரப்புர்வமாக இப்சியால்(ipci) இஸ்லாமிய இலாகாவின் கட்டிடத்திலுள்ள முக்தமர் மஹாலில் இன்று இரவு வெளியிடப்பட்டது. இதில் "இப்சியின்" நிர்வாகி "முஹமது கான்" அவர்கள் கலந்துகொண்டு இப்சியின் விரிவான பணிகளை விளக்கினார். இப்புத்தகத்தை மலேசிய இஸ்லாமிய தாவா கழகத்தின் தலைவர் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சி தாவா பனியின் அவசியத்தை மட்டுமல்லாது அவசரத்தையும் உணர்த்தியது. செய்தி:ஃபைசல் பின் அய்யூப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.