வெள்ளி, 11 மே, 2012

திருமணமா...? விபச்சாரமா..? எதை ஆதரிப்பீர்..?


தமிழகத்தின்  வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.

இந்நிலையில், அதுவரை இவர்மீது அதீத பக்திகொண்டு கடவுளாக கருதி வணங்கியோரும் எண்ணற்ற ஆத்திகரும் அதிர்ந்துதான் போயினர். இது, நாத்திகர்களுக்கு ஏகக்கொண்டாட்டமானது. வழக்கம் போலவே... முடிந்தவரை ஹிந்துமதத்தையும் அதன் கடவுள் கொள்கையில் உள்ள கோளாரையும் எடுத்துக்காட்டி அவரின் பக்தர்களையும் கிண்டல்-கேவலப்படுத்தி எக்கச்சக்க'டவுசர் - கோமண பதிவுகள்' எல்லாம் தொடர்ந்து வெளியிட்டனர்.

இப்படியாக அந்த சாமியார் தலைமறைவு...போலிஸ் வலைவீச்சு... கைது... கோர்ட்டு... சிறை... ஜாமீன்... வழக்கு... வாய்தா என்று கேவலப்பட்டு கிடந்தவர், திடீரென இந்துமத ஆன்மிக குருவாக.. இளைய மதுரை ஆதினமாக பதவிப்பிரமாணம் செய்து முடிசூட்டப்பட்டு கெளரவிக்க பட்டபோது...  அப்போது அசிங்க அசிங்கமாக பதிவு பின்னூட்டங்கள் போட்டு அவரை திட்டியவர்களை ஏனோ இப்போது காணவில்லை..!

இந்நிலையில், பதிவுலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா மதவாதிகளும் மதஎதிர்வாதிகளும் கேவலப்பட்டு கிடந்த இந்த சாமியாருக்கு ஆதரவாக பதிவு போடுவதா... இல்லை, எதிர்த்து பதிவு போடுவதா... 

அல்லது இப்படி ஒரு தலைகுனிவை உண்டாக்கிய இந்துமத குருஸ்தானமான மதுரை ஆதினத்தை கண்டித்து பதிவிடுவதா... இல்லை, ஆதரித்து பதிவிடுவதா...
அல்லது எது செய்தாலும் அது நம் மதத்துக்கு பின்னடைவு என்பதால் ஒன்றுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடுவதா... என்று குழம்பிய நிலையில்தான்...
சகோ.சுவனப்பிரியன் இந்த கண்றாவியை தினமலர் செய்தியிலிருந்து எடுத்துப்போட்டு பதிவாக வெளியிட்டார். உடனே... 'அதெப்படி ஒரு முஸ்லிம் இதைப்பற்றி பதிவு போடலாம்' என்று வெகுண்டு எழுந்தனர் சிலர்.

ஏனுங்க சகோ... கூடாதா..? நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..?

ஆனால், இப்படி சினங்கோண்ட பதிவர்கள் மதி இழந்து இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன செய்கிறார்கள தெரியுமா..? அந்த சாமியாரின் செத்துப்போன தனிமனித ஒழுக்கத்தை உயர்த்தவேண்டி எந்த ஒரு கேவலத்துக்கும் தயாரானவர்களாக... இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்வியல் (ஒருதார-பலதார வாழ்க்கை என் அனைத்தையும் வாழ்ந்தே காட்டிய) முன்மாதிரி மனிதரான, இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்களின் பலதாரமணத்தை முன்வைத்து அதை விபச்சாரம் என்று அபாண்டமாக அவதூறு கூறி, 'அது சரின்னா சாமியார் செய்ததும் சரிதான்' என்றும்... எனவே, ஹிந்து மத சாமியாரை பற்றி முஸ்லிம்கள் எழுத என்ன யோக்யதை இருக்கிறது' என்பதாக மூளை இன்றி உளறிக்கொட்டி வைத்துள்ளனர்.

இவர்களிடம், "ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?

அடுத்து, அன்று சமய அடையாளமாக இந்த சாமியாரை கண்டு திட்டியவர்கள் இப்போது புதிதாக 'சாமியார் சமய அடையாளமா' என்று கேட்கும்போதும், அவர் ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டபோது அதை கிண்டல் செய்த முஸ்லிம்களை நோக்கி உங்கள் நபி மட்டும் ஒழுங்கா என்று எகிரும்போதும், இங்கே ஒரு விஷயத்தை இவர்களும் மறந்து விடுகிறார்கள். 

அன்று, சாமியார் செய்த விபச்சாரத்தை வைத்து எனக்கு தெரிந்து எந்த முஸ்லிம் பதிவரும் ஹிந்து மதத்தை தாக்கவில்லை. அதை சாடியோ அது அழிய வேண்டும் என்றோ அதை அழிப்பேன் என்றோ மேற்படி அரைவேக்காட்டு பயங்கரவாத பதிவர்கள் போல எந்த முஸ்லிம் பதிவரும் பதிவிடவும் இல்லை. 

விபச்சாரம் செய்து டீவி வரை ஆதாரப்பூர்வ வீடியோ நியுஸ் வந்த ஒருவர் 'தன்னை குற்றமற்றவர்' என்று நீதி+மக்கள் மன்றத்தில் நிரூபிக்காத நிலையில், இன்னும் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில்... தான் சார்ந்த சமயத்தின் மூலமாக இன்னும் தண்டனை ஏதும் பெறாத நிலையில், சமய சார்பில் மற்ற சாமியார்கள் மூலம் ஒரு புறக்கணிப்பு கூட இல்லாத நிலையில், இன்னும் ஒரு படி எகிறி அதே சமயத்தின் மடாதிபதியாக அதே சமய குருவாக மற்றவர்களை வழிநடத்தும் ஆன்மீக தலைவராக, ஆதினமாக மகுடம் சூடியவுடன் 'அம்மன் சாமியான மதுரை மீனாட்சியை மீட்பேன்' என்பதும் நிச்சயமாக இது அந்த சமயத்துக்கும் அதை பின்பற்றுவோருக்கும் பெருத்த தலை குனிவுதான் என்று பல தினசரிகளின் ஹிந்து மக்களின் கமெண்ட்ஸ் கூட கூறுகின்றன.

இதனால்தான் சில இந்து அமைப்புகள் மதுரையில் சண்டைக்கு சென்றும் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் தன்மானம் நமக்கு புரிகிறது.

இதையெல்லாம் பார்த்து முஸ்லிம்களாக முன்னர் ஒருகாலத்தில் மதம் மாறிய நாங்கள்'நல்லவேளை நான் தப்பித்துக்கொண்டேன்' என்று ஆசுவாசப்படுகிறோம்.

இதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..!

நான் உட்பட பல முஸ்லிம் பதிவர்கள், 'பின் லேடன் குற்றவாளி என்பதற்கு சாட்சி இல்லை, ஆதாரம் இல்லை அதற்கு எதிராகத்தான் சாட்சிகளும் ஆதாரங்களும் உள்ளன' என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், பின்லேடன் பயங்கரவாதம் செய்திருந்தால் அதனை ஆதரிக்க மாட்டார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். தண்டனை கோருவார்கள்.

இதற்கு சரியான உதாரணம், அஜ்மல் கசாப். 

இவனை ஆதரித்து ஒரு முஸ்லிம் கூட எழுதியது கிடையாது.

இன்னொரு உதாரணம் முஹம்மத் அபுபக்கர் தெள்ஜி என்ற பங்கு பத்திர ஊழல்வாதி. இவனையும் எவரும் ஆதரித்தது இல்லை.

சுப்ரீம் கோர்ட்டே ஆதாரம் இல்லை என்று தூக்கில் போடாமல் கிடப்பில் வைத்திருக்கும் காஷ்மீர் போராளி அப்சல் குருவை புரட்சிகர இயக்கத்தினர் வெளிப்படையாக ஆதரித்து பதிவு போட்டாலும் கூட பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்டதால் ஆதரிக்க தயங்கவே செய்கின்றனர்.

இவை அனைத்துக்கும் என்ன காரணம்..? இஸ்லாம்..!

அது... இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமின்றி.... ஒருவன், தான் நாடு சார்ந்த சட்டத்துக்கும் நீதிக்கும் அரசுக்கும் அது இஸ்லாத்துக்கு எதிரானது இல்லை எனில் கட்டுப்பட சொல்கிறது.

ஹிந்தியில் முஸ்லிம் நடிகர்கள் சிலர் முன்னணியில் கொடிகட்டி பறந்தாலும் சினிமாவை வெறுத்த காரணத்தால் அவர்களின் புகைப்படம் கூட எம் வலைப்பூவில் வர அருகதை இழக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் என்னதான் உலகப்புகழ் பெற்றாலும் சினிமா இசை என்ற ஒரே காரணத்தால் முஸ்லிம் பதிவர்களால் ஓரம் கட்டப்படுகிறார். இன்னும் தர்ஹா வணக்கம் எனும் ஷிர்க் மூடநம்பிக்கையின் காரணமாக அவர் வெறுக்கவும் படுகிறார்.

இதற்கெல்லாமும் காரணம் இஸ்லாம்தான். அது மேற்கூறிய ஆபாச அசிங்க சமூக சீர்கேடுகளை அங்கீகரிக்க வில்லை.

சாட்சி ஆதாரங்கள் படி நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீதும் வெறுப்புதான் எமக்கு உள்ளது. காரணம் இஸ்லாம் அப்பாவி மக்களை கொலை செய்வதை கடுமையாக எதிர்க்கிறது.

தன் சமயத்தை காக்க நினைத்து சாமியாரை ஆதரிக்க வேண்டி இஸ்லாத்தை தாக்கும் - அழிக்கத்துடிக்கும் (!?! :-)) அரைவேக்காட்டு பதிவர்களே...! 

உங்களுக்கு திருமணத்துக்கும் விபச்சாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையே..? 

பலதார மணத்தை விபச்சாரம் என்று திரிக்கும் உங்களுக்கு ராமாயணத்தில் கடவுளான ராமனின் தந்தைக்கு அறுபதினாயிரம் மனைவி பற்றி சிந்திக்க மூளை முயலாது. அது விபச்சாரம் என்றால், ராமன் பிறப்பு என்ன என்றெல்லாம் கேள்வி வரும்..! 

ஒருத்தனுக்கு ஒருத்தியே சிறப்பு என்றும், போர் போன்ற இழப்பால் ஆண்கள் குறைந்து பெண்கள் & அனாதைகள் மிகும் நிலையில் பொருள்வசதியும் உடல் தகுதியும் உள்ள ஒருவன் அதிக பட்சம் நான்கு பெண்கள் வரை மணந்து அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் காப்பாற்றலாம் என்றிருக்க.... இந்த உயரிய நோக்கம் புரியாமல்... 'ஒருத்தனுக்கு நாலு மனைவியா அய்யகோ... இது விபச்சாரம் அது அபச்சாரம்' என்று கதறும் உங்கள் அறிவுக்கு மகாபாரதத்தில் ஐந்துஆணுக்கு ஒரு பெண் மனைவி என்பது பற்றி எல்லாம் சிந்திக்க முடியாது.

ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா..? அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா..? ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே..! கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே..! பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்..? அறிவுள்ளவர்கள் சிந்திக்கவும்..!

ஆனால், நீங்கள்  என்ன செய்கிறீர்கள்..? ஒரு முஸ்லிம் குற்றம் செய்தால் 'இஸ்லாம் ஒழிய வேண்டும்' என்கிறீர்கள். அந்த குற்றத்தை இஸ்லாம் செய்ய சொல்லி இருந்தால்தான் அபப்டி சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. 

அஜ்மல்  கசாப் அப்பாவி மக்களை கொலை செய்தபோது உள்ள மக்களின் மனநிலைக்கும்...
அப்படி கொலை செய்தவனின் வழக்கு நிலுவையில் இருக்க அவன் ஜாமீனில் வெளியே வந்து டெல்லியில் ஜும்மா மசூதியில் தலைமை இமாமாக மகுடம் சூட்டப்படும்போது உள்ள மக்களின் மனநிலைக்கும்...

----வித்தியாசம் இருக்குமா... இருக்காதா..?

சரி.... இப்போது நான் இப்படி சொன்னால்..?

" விபச்சார குற்றச்சாட்டுள்ள சாமியார் மதுரை ஆதினமாக ஆக்கப்படவில்லையா... அதனால், இது சரிதான்... எனவே இதனை எதிர்த்து எந்த மாற்று மதத்தினருக்கும் பதிவு போட உரிமை இல்லை"
.....என்று நான் ஒரு பதிவு போட்டால்.... நானும் அவர்களைப்போன்றே அறைவேக்காடுதானே..?

குடும்ப  வாழ்வில் தனி மனித கலவி ஒழுக்கத்தில் 'பரந்த மனப்பான்மையுடன்' சமரசம் காணும் அமெரிக்க கலாச்சாரத்தில் கூட, கிளிண்டன் - மோனிகா கள்ள உறவு...முன்னர், அமெரிக்க அரசியலில் அதிபரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு காரணியாயிற்று..! ஆனால், இந்திய குடும்ப வாழ்வில் கலவி ஒழுக்கம் முக்கியமாக பேணப்படும் இங்கே அப்படிக்கூட ஒரு விழிப்புணர்வு  இல்லை எனில் நிலைமை மோசம் அல்லவா..?

விபச்சாரம்  அது அவர்கள் இஷ்டம் என்போர்... அதில் ஈடுபட்டோரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ தாம் இருந்தால் மட்டும் இப்படி சொல்வதில்லையே..?! அரிவாளை தூக்குவார்கள்... அல்லது அறிவாள்மனையை தூக்குவார்கள். இல்லேயேல் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு ஓடுகிறார்கள்..! மேஜரானவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமல் மனம் ஒத்து இணைதல் விபச்சாரம் இல்லை ; அது அவர்களின் தனிமனித உரிமை என்னும் விபச்சார ஆதரவு நீதி கூட இங்கே விபச்சாரத்துக்கு எதிராக  தீர்ப்பளிக்கிறதே..!?

ஒரு மதத்தில் உள்ள ஒருவர் தம்முடைய தனிமனித ஒழுக்கத்தை இழக்கும் போதும்... சமய சட்டம் மீறி குற்றம் புரியும்போதும்... அவருக்கு உரிய தண்டனை அந்த சமயத்தில் சொல்லப்பட்டு இருந்தால் அது மிக நாணயமான சமயம்தான். அப்படியானதொரு தண்டனை இருந்து அச்சமயத்தினரால் அது குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டால் மிக்க நன்று. இல்லையேல், குற்றவாளியை அச்சமயத்தினர் வெறுத்தாவது ஒதுக்க வேண்டும். இதுதானே குறைந்த பட்ச நேர்மை..?

மாறாக சமய தலைவராக மகுடம் சூட்டி அழகு பார்ப்பது கேவலம் இல்லையா..? அப்படி நடந்தால் அது தலைகுனிவுதானே..? இதை கண்டும் காணாது செல்ல வேண்டும் என்ற நிலை மக்களுக்கு இருந்தால் அது இன்னும் மோசம் அல்லவா..? அந்த குற்றம் அதே சமயத்தால் 'கடவுள்கள் செயல்' என அங்கீகரிக்கப்படும்போது... அந்த சமயத்தில் அது 'தவறில்லை' என்று கூறப்படும்போது... அதற்காக... மற்ற சமயத்தினரிடம் உள்ள நல்ல விஷயத்தை அவர்கள் சார்ந்த சமயத்தை கொச்சைபடுத்தி தம்மை உயர்வாக கற்பனை செய்து பதிவிட்டுக்கொள்வது மூடத்தனம் அல்லவா..? இதுதானே மதவெறி..? இதுதானே ஒழிய வேண்டும்..?

இந்த மாதிரியான பதிவர்களில் நான் இல்லை என்றால் அது எனக்கு மன நிறைவுதானே..? இந்த மனநிறைவையும் மனத்தெளிவையும் தந்தது நான் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் அல்லவா..? அதுதானே இப்போது என்னை தலை நிமிர வைத்துள்ளது..!

"முஸ்லிம்  என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா..." ---இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது..? என்ன மதவெறி இருக்கிறது..? ஒருவேளை நான் அந்த சாமியார் மதத்தில் இருந்திருந்தால்... நேற்று முஸ்லிமாக மாறி இன்று இதை சொல்லித்தான் பதிவு போட்டு இருந்திருப்பேன்..!
தொடர்புடைய  பதிவுகள்:


டிஸ்கி:- 

தொடர்ந்து  கள்ளப்பெயரில் மைனஸ் ஓட்டு குத்தி ஓய்ந்து போனவர்கள்... அப்புறம் பிளஸ் ஓட்டு குத்தி குழப்பம் செய்தவர்கள்... ஹி..ஹி..ஹி... இப்போது என்ன செய்வார்களோ..!?!?! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.