சனி, 28 ஏப்ரல், 2012

விடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்!


உலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை "விடியல் வெள்ளி" மாத இதழ் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. சிறிய வடிவிலான ஏடாக தொடங்கப்பட்ட இந்த இதழ் இறைவனின் கிருபையால் தற்போது மாதந்தோரும் 25,000ற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு வருகிறது. தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களின் அட்டூழியங்களை முதன் முதலில் சமூகத்திற்கு எடுத்துறைத்த பெருமை விடியல் வெள்ளியையே சாரும். தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம் பெயர் இல்லாமல் செயல்பட்ட அன்றைய காலத்தில் மக்கள் இப்பத்திரிக்கையின் பெயரைக் கொண்டே அழைத்து வந்தனர். ஏன் இன்றும் கூட பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை "விடியல் குரூப்" என்றே சில இடங்களில் அழைத்து வருவதை காண முடிகிறது.

சமூக மாற்றத்திற்காக விடியல் வெள்ளி ஆற்றிவரும் பங்கு சிறப்பானதாகும். அப்பேற்பட்ட மாத இதழான "விடியல் வெள்ளி" பத்திரிக்கைக்காக ஓராண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் ஏப்ரல் 25 முதல் மே 10 வரை செயல்பட தொடங்கியுள்ளது.  கடுமையான விலை ஏற்றத்தின் காரணமாக சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சந்தாவின் விலையை அதிகரிக்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆண்டு சந்தாவின் விலை ரூபாய் 240/-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே விடியல் குடும்பத்தில் நீங்களும் சந்தாதாரர் ஆவீர் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்களை நாடி வரும் எங்களுடைய சகோதரர்களிடம் சந்தாவை செலுத்து ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.