வியாழன், 19 ஏப்ரல், 2012

முஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் டி.ஜி.பி

குஜராத்;முஸ்லிம்களை கொல்லும் இந்துக்களை தடுக்கக்கூடாது என்றும், இந்துக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என நரேந்திர மோடி கூறியதாக இதற்கு முன்பு பல காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்                                                            கடந்த 2002ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தில் முன்னால் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 நபர்கள் கொடூரமான முறையில் சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கடந்த 10 வருடங்களாக போராடி வருகிறார். இவர் அளித்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. விசாரணையின் இறுதி அறிக்கையை அஹமதாபாத் பெருநகர நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் படி விசாரணை மேற்கொண்டு தனது இறுதி அறிக்கையை சமர்பித்தது அக்குழு. அதில் நடைபெற்ற வன்முறைக்கும் நரேந்திர மோடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இவ்வழக்கை இத்தோடு தள்ளுபடி செய்ய பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற அன்று இரவு காந்தி நகரிலுள்ள தனது வீட்டில் அப்போதைய டி.ஜி.பி. சக்கரவர்த்தி உட்பட பல மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார் என‌ நரேந்திர மோடி மீது குற்றம் சுமத்தப்பட்டது.


ஆனால் இது முழுக்க முழுக்க பொய் என மற்றொரு முன்னால் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிப்பதாவது, கடந்த 2004 ஆம் ஆண்டு நீதித்துறை கமிஷனுக்கு தாம் எழுதிய கடிதம் ஒன்றில் நரேந்திர மோடி நடத்திய இரகசிய கூட்டத்தில் முஸ்லிம்களை கொல்லும் வி.ஹெச்.பியினரை தடுக்க வேண்டாம் என நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக அப்போதைய டி.ஜி.பி சக்கரவர்த்தி தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.


இவ்வழக்கின் உண்மை நிலவரம்:

கடந்த ஏப்ரல் 9, 2002ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 18, 2002 வரை கூடுதல் டி.ஜி.பி. அதிகாரியாக நான் பணியாற்றினேன். என்னுடைய பணியின் காலத்தில் சங்கப்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புடைய பல அமைப்புகள் முஸ்லிம்களுக்கெதிரான படுகொலைகள், நீதி தாமதிக்கப்படுவதையும், மறுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி பல‌  ஈடுபட்டதற்கான பல குற்றச்சாட்டுக்களை மாநில அரசிற்கும், டிஜிபி அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.

2002ல் நடைபெற வேண்டிய குஜராத் சட்டமன்ற தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் இதனாலேயே தள்ளிவைத்தது என்பதை ஆகஸ்ட் 16, 2002ல் தேர்தல் ஆணையம் இது தொடர்பான ஆணையை வெளியிட்டது. அதன் பின்னர் நீதிபதி நானாவதி கமிஷனிடம் 660 பக்கங்களை கொண்ட வாக்குமூலங்களை சமர்பித்திருக்கிறேன். அதே வாக்குமூலத்தை சி.பி.ஐ அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ராகவனிடமும் கொடுத்திருக்கின்றேன்.

கடந்த 2004ல் நானாவதி கமிஷனிடம் நான் அளித்த நான்காவது வாக்குமூலத்தில் நரேந்திர மோடி நடத்திய இரகசிய கூட்டத்தில் அப்போதையை டி.ஜி.பி சக்கரவர்த்தி அது தொடர்பாக என்னிடம் கூறியதையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். அன்று நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி சக்கரவர்த்தி என்னிடம் கூறும்போது நரேந்திர மோடி அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து கோத்ரா இரயில் எரிப்பு தொடர்பாக இந்துக்கள் பழி தீர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டுவிடவேண்டுமெனவும், இந்துக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் மோடி கேட்டுக்கொண்டதாக கூறினார்.

எனது வாக்குமூலத்தை உறுதி செய்வதற்காக மூளையை பரிசோதிக்கும் சேதனை முறையையும், கைரேகைகளை பரிசோதனை செய்வதற்கும் நான் தயார் என்று அறிவித்திருந்தேன். ஆனால் நானவதி கமிஷனாகட்டும், சிறப்பு விசாரணைக்குழுவாகட்டும், இருவருமே எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் புறந்தள்ளிவிட்டனர். நரேந்திர மோடி நடத்திய இரகசிய கூட்டத்தில் பங்கெடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் இத்தகைய சோதனையை மேற்கொண்டிருந்தால் எவ்வித சந்தேகமும் இல்லாமல் மோடியின் குட்டு வெளிப்பட்டிருக்கும்.

என்னுடைய மூன்றாவது வாக்குமூலத்தில் வன்முறை தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டினை விரிவாக எடுத்துக்கூறியுள்ளேன். பொய்யான வாக்குமூலங்களை தயார் செய்ய நான் நிர்பந்திக்கப்பட்டேன். பொய்யான அறிக்கைகளை தயார் செய்வதற்கும், போலியான படுகொலை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தப்பட்டேன்.

2004ல் உச்ச நீதிமன்றம் கலவரம் தொடர்பாக குஜராத் அரசை விமர்சித்தது. வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியது. பின்னர் மறு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்ட 2000 வழக்குகள் மூடி மறைக்கப்பட்டது.


உத்திரபிரதேச காவல்துறையினரையும் கோத்ரா இரயில் எரிப்பு தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என சிறப்பு விசாரணைக்குழுவிடம் தெரிவித்திருந்தேன். அதனையும் அவர்கள் புறந்தள்ளிவிட்டனர். காவல்துறையினரின் கைப்பாவையாகவே விசாரணைக்குழுவினரும் செயல்பட்டுள்ளனர். எனவே தான் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு விசாரணைக்குழுவின் இந்த அறிக்கை எந்த ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வி.ஹெ.பினர் ஆவார்கள். உத்திர பிரதேசம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படவேண்டும் என வி.ஹெச்.பி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு குஜராத் திரும்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோத்ரா இரயில் நிலையம் அருகே வந்த போது தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தீவிபத்து ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே வி.ஹெச்.பியினர் அடுத்த நாள் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அன்று இரவே நரேந்திர மோடியும் சட்ட ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என காவல்துறையினரை அழைத்து இரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சி.பி.ஐ அதிகாரி ராகவண் தலைமையிலான விசாரணைக்குழு நரேந்திர மோடி நடத்திய அந்த இரகசிய கூட்டத்தில் பங்கெடுத்த பல காவல்துறை அதிகாரிகளை விசாரணை செய்துள்ளது. அதில் அனைத்து அதிகாரிகளும் நரேந்திர மோடி அவ்வாறு கூறவில்லை என்றே கூறியதாக விசாரணைக்குழு தெரிவித்தது. அதேபோல் அப்போதைய டி.ஜி.பி. சக்கரவர்த்தியும் மோடி அவ்வாறு கூறவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.