சனி, 7 ஏப்ரல், 2012

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை !

வளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அமைப்புச் சார்ந்தவர்களாக  இருந்தாலும் சரியே! அதுவல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் முன்னேறிய நிலையிலும், மற்ற சில சமூகங்களில் பலர் பின் தங்கிய நிலையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது.
எனவே பின் தங்கிய சமூகங்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் நிலை உயர வேண்டும் என்றால் இடஒதுக்கீடு அவசியம். அப்படி செய்தால் தான் அவர்களின் சமநிலை உயரும்.

இடஒதுக்கீடு ஒரு வரலாற்று பார்வை!

நமது இந்திய தேசத்தில் சுதந்திரமும், குடியரசு உருவாக்கமும் முஸ்லிம்களை பொருத்த மட்டில் சில வேதனைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளன. தேசப்ரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள், இடப்பெயர்வுகள் இவையெல்லாம் முஸ்லிம்களை தேசத்தை பிரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் நமது இந்திய தேசத்தில் சுதந்திரமும், குடியரசு உருவாக்கமும் முஸ்லிம்களை பொருத்த மட்டில் சில வேதனைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளன. தேசப்ரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள், இடப்பெயர்வுகள் இவையெல்லாம் முஸ்லிம்களை தேசத்தை பிரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் பார்க்கப்பட்டு வருகிறது. இதனுடைய விளைவு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பெற்றிருந்த பல உரிமைகளை இழக்க நேரிட்டது. இடஒதுக்கீடு தனி வாக்காளர் தொகுதி, அமைச்சரவை பிரதிநிதித்துவம் ஆகியவை அவர்களுக்கு மறுக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம்களின் சமூக நிலைகளை ஆராய்ந்த ஆங்கிலேய அரசு அவர்களது சமூக நிலைகளை உயர்த்த இடஒதுக்கீட்டை வழங்கியது.

1929ல் மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் முஸ்லிம்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்பு 1934ல் இந்தியா முழுவதும் அனைத்து அரசு பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


சுதந்திரத்திற்கு பின் 1947, செப்டம்பரில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 25% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

1950ல் நமது இந்த்ய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது பட்டியல் வகுப்பினர்களுக்கு (தலித்) 15% இடஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்ககும், முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின் முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைகளை ஆராய இந்திய அரசால் பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட கமிஷன்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் அரசு சிறப்பு திட்டம் தீட்டி அவர்களை முன்னேற்ற வேண்டும் என்றும் அதற்கு இடஒதுக்கீடு அவசியம் என்றும் பரிந்துரை செய்தது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.