ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!

அன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும், கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள் மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..! அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy). அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த
அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி முற்றாக அழிந்தது.
இவ்வளவு பெரிய நாசத்தை கண்டு விட்டு, கதிகலங்கி உலகமே நிலை குலைந்து திக்பிரமை பிடித்து செயலற்று நெஞ்சு விம்ம துக்கத்தில் இருக்க, ஜப்பனோ... என்ன செய்வது என்றே புரியாமல் அப்படியே உறைநிலையில் சிலையாகிக் கிடக்க... மூன்று நாட்கள் கழித்து...

ஜப்பான்- நாகசாகி- 1945- ஆகஸ்ட்-9.

0.0000000000....1% கூட மனிததன்மையோ, குற்ற உணர்ச்சியோ... இன்னும் மனிதன் என்றால் அவனிடம் குறைந்த பட்சம் என்ன என்ன தன்மைகள் எல்லாம் இருக்க வேண்டுமோ அதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு சாத்தானாய்... "உலகத்தின்  அதிகாரபூர்வ பயங்கரவாதி-அமெரிக்கா" மீண்டும் இங்கே இன்னொரு அணுகுண்டை போட்டான். முன்பை விட இங்கே அழிவு கூட இருக்க வேண்டும் என்று ‘குண்டு மனிதன்’ (fat man) என தெனாவட்டாய் இதற்கு பெயரும் இட்டான். அதன் தீ ஜுவாலை மேகத்தை தாண்டி, குண்டு போட்ட விமானத்தின் உயரத்தையும் கூட  தாண்டியது..! 74,000 அப்பாவி பொதுமக்கள் நாகசாகியில் நாசமாகினர்.
மனித வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத இந்த அகோர குண்டு வீச்சுகள் மூலம் ஏற்பட்ட மனித இறப்பும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. குண்டு விழுந்த பிறகு வருடக்கணக்காக மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். கதிர்வீச்சு பாதிப்புகள் இன்றும் தலைமுறையாக தலைமுறையாக தொடர்கிறது. 

 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டு கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் கூட சதைப்பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாக குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றை வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இந்த குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை இப்படி சொன்னது: “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடுகளாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று..! இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டை போடத்தயார் நிலையில் இருந்தது..! இதனை எப்படியோ அறிந்து கொண்ட ஜப்பான், 1945, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தான் சாத்தான் அமெரிக்கா. 

“அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலை செய்தது. பொதுமக்கள் மீது அமெரிக்காவுக்கு அணுகுண்டைப்போட எந்தத்தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் உள்ளக்குமுறலை முன்வைத்தது.

அப்போது, அந்த பயங்கரவாதி சாத்தான் என்ன சொன்னான் தெரியுமா..? "அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது"  என அமெரிக்க அரசின் அறிக்கையில் குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதக படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்து பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது..!  ...இப்போது இந்த நம் பதிவிலும் கூட..!

அதன் பிறகு உலகம் இவனை "World's Official Terrorist"-ஆக மானசீகமாய் அங்கீகரித்தது. இவன் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை. இவனை எதிர்த்தது ரஷ்யா. நோக்கம், தானும் ஒரு "World's Official Terrorist"  ஆக வேண்டும் என்பதே..! இருவர் பக்கமும் அணிகள் சேர்ந்தன. 

அப்போது உலகில் சில நாடுகளில் 'மனிதர்கள்' ஆட்சி செய்தனர். அவர்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து 'அணிசேரா நாடுகள் அமைப்பு' என்று ஒரு அணியை ஏற்படுத்தினர். அதில் நான் பிறந்த ஒரு நாடும் முன்னணியில் இருந்தது என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஆனாலும் இவர்கள் சற்று ஆயுத பலமில்லாதவர்களாகவே இருந்தனர். பின்னாளில், அந்த இரண்டு 'official பயங்கரவாதிகளும்' செய்த 'official பயங்கரவாதங்களை' இவர்களால் தடுக்க இயலவில்லை. இருவருக்கும் மத்தியில் புதிய புதிய ஆயுதங்கள் உற்பத்தி செய்வதில் கடும் போட்டி நடந்தது. இதற்கு 'பனிப்போர்' (cold-war) என்று 'கூலாக' பெயரிட்டனர் கோமாளிகள்.

அப்போட்டியில் ஒரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட, அதை அளவுக்கு மிகுதியாக உற்பத்தி செய்துவிட்ட பின்னர், (அழிவு)அறிவு முன்னேற்றத்தால் இப்போது முன்னதைவிட சக்தி வாய்ந்த புதிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட... பழையதை என்ன செய்வது..? அழிக்கவோ தூக்கிவீசவோ அதனால் நஷ்டப்படவோ விரும்பவில்லை இந்த பயங்கரவாதிகள். எனவே...

இருவரும் தனித்தனியே யோசித்ததன் விளைவுதான், "தானே போரில் ஈடுபடக்கூடாது; வேறு யாரையாவது போரிட தூண்டி விட்டு அவர்களிடம் தங்கள் ஆயுதங்களை கொடுத்து, அதன்மூலம் ஏற்படும் நாசத்தின் மூலம் தங்களின் எந்த ஆயுதம் 'வலியது' என்று அறிந்து கொள்வது" என்று முடிவு எடுத்தனர். 

இவர்களுக்கு இதில் 'போரிட்டு உதவுவதற்கு' என, உலக வரலாற்றில்  அக்கிரம ஆட்சியாளர்களாய் பலர் வாழ்ந்தனர். (இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்). 

இதற்கு  உலகில் நமக்கு நன்கு அறிந்த உதாரணங்கள் சில: 

அமெரிக்க-இராக்  Vs.  ரஷ்ய-ஈரான்
அமெரிக்க-பாகிஸ்தான் Vs. ரஷ்ய-இந்தியா
அமெரிக்க-இஸ்ரேல் Vs. ரஷ்ய-எகிப்து
இப்படி  மனிதம் இழந்த சுயநல இளிச்சவாயர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது..? 

அடுத்து... மீண்டும்-யோசனை- ம்ம்ம்ம்...ஐடியா..! 

இந்த இருவரும் தம் படை ஆயுத பலத்தால் உலகில் எங்காவது ஏதாவது ஒரு அக்கிரமத்தை ஏதாவது பகுதியில் செய்துகொண்டு இருந்தனர் அல்லவா..? இப்போது, இந்த வல்லரசுகளுக்கு எதிராக அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் யாராவது அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்து விட்டால் உச்சி குளிர்ந்து விடும் இவர்களுக்கு. உடனே ரகசியமாக அந்த புரட்சியாளர்களுக்கு ஆயுத சப்ளை செய்துபோரை ஊதி ஊதி அணையாமல் பார்த்துக்கொண்டு இவர்களின் வயிறை வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இதற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. எதிர்க்கப்படும் அரசு எதாவது ஒரு வல்லரசின் அணியில் இருந்தால்... அதற்கு official ஆயுத சப்ளை செய்வது அந்த வல்லரசுதான். 

அதேசமயம், எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு/பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத சப்ளை செய்வது எதிர் வல்லரசு..! இப்படி, பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத சப்ளை பற்றி உலகில் ஒருத்தணும் வாயை திறக்க மாட்டான்..!

சிந்தியுங்கள்  சகோ.....!

இந்தியாவுடன் போரிட காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் தருவது யார்?
இலங்கையுடன் போரிட விடுதலைப்புலிகள் ஆயுதம் பெற்றது யாரிடமிருந்து..?
இஸ்ரேலுடன் போரிட PLO/ஹமாஸ் இவர்களுக்கு ஆயுதம் வழங்குவது யார்?
ரஷ்யாவுடன் போரிட தலிபானுக்கு/அல்கைதாவுக்கு  ஆயுத சப்ளை யார்..?

இதனால் உலகெங்கும் வரலாற்றில் எங்காவது இரண்டு மூன்று இடங்களில்  போர்கள் என்ற பெயரில் பயங்கரவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன;  நடத்திய வண்ணம் இருந்தனர் இந்த இரண்டு சாத்தான்களும்.

இன்னும்... இதுபோல "வல்லரசுகள் sponsored terrorism" ஏகப்பட்டவை உள்ளன உலகில்..! இதற்கெல்லாம் ஒருத்தரும் ஒரு சிறு எதிர்ப்பை கூட சொல்வதில்லை..! ஐநா என்று ஒரு தூங்குமூஞ்சி "மாற்றுத்திறனாளி" அமைப்பு உண்டு. 

இவர்களின் வேலை:- போர் ஓய்ந்த பின்னர் சாவகாசமாக வந்து போர் நடந்த இடங்களை பார்வையிட்டு... "இத்தனை ஆயிரம் பேர் இறந்தனர்... இவ்வளவு சேதம்... இதெல்லாம் போர்குற்றம்..." என்று அறிக்கை மட்டும் அளிப்பது. தட்ஸ்ஆல்..!

பிற்காலத்தில்  ஒரு ரஷ்ய அதிபர் அமெரிக்க கைக்கூலியாகி தன் நாட்டின் இரும்புத்திரையை உடைத்து விட்டு அதற்கு பிரதியுபகாரமாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுக்கொண்டு... அங்கேயே சொகுசாக தங்கியும் விட்டார்.

இப்பொது, அந்த அமெரிக்கா எனும் சாத்தான் தனக்கு போட்டியே இல்லாமல் போய்விட... இனி தன் ஆயுதத்தை தானே பரிசோதிக்க ஆரம்பித்தது. அதாவது தன் பழைய ஆயுதத்தை எவரெல்லாம் வாங்கி வைத்து இருக்கிறார்களோ.. அவர்களிடம் வலிய சென்று தன் புதிய ஆயுதங்கள் மூலம் சண்டை போட்டு ஜெயிப்பது..! இது ஒரு நோய். அமெரிக்கா எனும் சைத்தானை பிடித்து ஆட்டும் மன நோய். இதன் அடிப்படையில் புதிய ஸ்கட் ஏவுகணை தன் பழைய பேட்ரியாட் ஏவுகணையை விட பலம் வாய்ந்தது என்று அறிய ஒரு போர். 

( இங்கே நம் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு செய்தி: 
2010-ம் ஆண்டின் நம்பர் ஒன் ஆயுத ஏற்றுமதியாளர் அமெரிககா..! 
நம்பர் ஒன் ஆயுத இறக்குமதியாளர் இந்தியா..! )

தான் தந்த பழைய ஆயுதத்தை விட தன் புதிய ஆயுதத்தை பரிசோதிக்க மட்டும் அல்லாது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தையாக எண்ணைய் வளம், எரிவாயு வளம், கனிம வளம் என்று பலவற்றுக்காகவும் போர் என்ற பெயரில் தன் பயங்கரவாதத்தை நடத்தும் அமெரிக்கா..! இதனை எதிர்த்து எவனாவது கேள்வி கேட்டால் அவன் மீதும் போர் நடத்தும்.

இந்த 'மனிதக்கொல்லி வைரஸ் நோய்' முற்றி... கடைசியில் தன் சொந்த நாட்டு மக்களையே கொஞ்சமும் ஈவு இறக்கம் இன்றி WTC-இல் விமானம் மூலம் தாக்கி பின்னர் குண்டுகள் வைத்து கட்டிடத்தை இடித்து, மக்களை கொன்று, (ஆதாரம்) அந்த பழியை தான் ஒழிக்க நினைக்கும் தன் பயங்கரவாத அடியாள் மீது போட்டு, (ஆதாரம்) அவனை உலகத்துக்கே எதிரியாக்கி, சமீபத்தில் கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்கனில் (ஆதாரம்) அவன் இருப்பதாக தன் ஊடக பலத்தினால் உலகத்தையே நம்பவைத்து... ஆப்கானை பிடித்துக்கொண்ட பின்னர், அடியாளின் அவசியம் தேவை இல்லை என்றாகிவிட்ட பின், இப்போது தன் காலணி -அதாவது- செருப்பு நாடான பாகிஸ்தானில் "ஒபாமா-ஒசாமா-டிராமா"-வை வெற்றிகரமாக அரங்கேற்றி உள்ளது. (ஆதாரம்)

மிக நுணுக்கமாக ஒவ்வொரு சினிமாவையும் அலசி பிச்சு கூறு போட்டு விருது கொடுக்கும் அகாடமிகளிடம்... ஏகப்பட்ட ஓட்டைகள், முரண்கள் உள்ள  நம்பகத்தன்மை அதாவது கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத இந்த சூப்பர் ஹிட் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கலாம்..! இப்படி ஒரு "ஒபாமா-ஒசாமா-சினிமா"-வை  தன் மண்ணில் அனுமதித்ததற்கு சர்தாரி-கிலானிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கூட கிடைக்கலாம்..!

ஆச்சர்யப்பட அவசியம் இல்லை சகோ...! 

இரண்டாம் உலகப்போர் சமயம் அப்போதைய பிரிட்டிஷ் அரசால் 'dead-or-alive' பிடித்துக்கொடுத்தால் bounty prize £10,000 என அறிவிக்கப்பட்ட மேநாச்சம் பெகின் என்ற ஒர் உலக மகா யூத வெடிகுண்டு பயங்கரவாதிக்கு, பிற்காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து அழகு பார்த்தது இந்த அமெரிக்க சைத்தான்.

இதுபோல, அமெரிக்காவின் "முன்னாள் பயங்கரவாத நண்பன்" ஆன, பின்னால் 'பயங்கரவாதி' என அறிவிக்கப்பட்டு தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைக்கப்பட்ட, இவ்வாரம் ஃபைல் குளோஸ் பண்ணப்பட்ட, ஒசாமா பின் லாடன் கூட, கொஞ்சம் அமெரிக்காவிற்கு வளைந்து கொடுத்து இருந்திருந்தால், அன்று ஆப்கன் அதிபராய் ஆக்கப்பட்டு, இன்று நோபல் பரிசும் கொடுக்கப்பட்டும் இருந்திருக்கலாம்..! 

ஊடகம் மூலம் அமெரிக்கா சொன்னால், எதையும் நம்பும் மக்கள் உள்ள இவ்வுலகில், அது நினைத்தால் எதுவும் நடக்கும் இன்றைய உலகில்..! 

உலகத்திற்கு "World's Official Terrorist" ஆன இந்த அமெரிக்காவை 'கொல்வது' யார்..? 

'கொல்வது' என்றால்...

"இனி நான் ஆயுதங்கள் செய்து பயங்கரவாதிகளுக்குவிற்க மாட்டேன்..."
"எந்த நாட்டையும் என் ஆயுதங்கள்மூலம் அநீதமாய் ஆக்கிரமிக்க மாட்டேன்"
"எந்த நாட்டு மக்களையும் இனி நான் குண்டுகள் போட்டு கொல்ல மாட்டேன்"
----என ஒவ்வோர் அமெரிக்க அதிபரும் இறைவனிடம் சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் எடுத்து, அதன்படி நடந்து... அப்படி அமெரிக்கா மனம் திருந்தினால் மட்டுமே உலகத்தில் இனி அமைதி நிலவும்..! வேறு வழி இல்லை..!

இதுவரை உலகம் முழுக்க அமெரிக்கா சாகடித்த மனித உயிர்களை கணக்கிட்டால்... கோடிகளில் தான் இருக்கும். பிரபஞ்ச மகா பயங்கரவாதி இவன்..!

உலகம் இன்னும் உன்னை நம்புதேடா...! ஓ..! பயங்கரவாத சைத்தானே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.