ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வந்தடைந்தது!

சென்னை: தீவிரவாதத்திற்கு எதிராகவும், அப்பாவி இளைஞர்கள்
சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் " நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை" என்ற தலைப்பில் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 12ம் தேதி புதுடெல்லி பட்லா ஹவுஸில் தொடங்கிய இந்த பிரச்சார யாத்திரை உத்திரபிரதேசம், போபால், மஹாராஷ்டிரா, கர்நாடகா வழியாக கடந்த 19ஆம் தேதி சென்னை வந்தடைந்தது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற்ற பின்பு, அன்று மாலை 7 மணியளவில் சென்னை மண்ணடியிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தில் என்.சி.ஹெச்.ஆர்.ஓ சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மாலை 7 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்கு என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தமிழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் தலைமை தாங்கினார். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் முஹம்மது தம்பி வரவேற்புரை நிகழ்த்தினார். புதுச்சேரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் மெளலானா அப்துல் காதர், என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய செயலாளர் ரேனி ஏலின், குஜராத்தைச் சேர்ந்த சமூக சேவகர் வழக்கறிஞர் பிலால் காஜி, ஹிமாச்சல் பிரதேசத்தை சார்ந்த பல்வத் சிங் யாதவ், டாக்டர் அஜ்மல், எஸ்.டி.பி.ஐயின் தென்சென்னை மாவட்ட தலைவர் பி.முஹம்மது ஹுஸைன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.