சனி, 28 ஏப்ரல், 2012

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள்!

சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள்,

 பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான். முக்கிய பிரமுகர்களை கடத்தி கொல்வது, காவல்துறை அதிகாரிகளை கொலை செய்வது, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பது, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் வண்டிகளுக்கு குண்டு வைத்து கவிழ்த்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள் மாவோயிஸ்டுகள்.

இந்தியவில் இவர்கள் உருவான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இவர்கள் செய்த பயங்கரவாத செயல்களை பட்டியலிட தொடங்கினால் எழுதி முடிக்கவியலாது. அந்தளவிற்கு இவர்களது தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மிகப்பெரும் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இவர்களை தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ அரசாங்கமும், ஊடகங்களும் குறிப்பிடுவதே இல்லை மாறாக இவர்களை மாவோயிஸ்டுகள் என்று தான் பெரும்பாலும் கூறி வருகிறது.

முஸ்லிம்கள் என்று வரும் பட்சத்தில் சட்டைப்பையில் பிளேடு வைத்திருந்தாலும் கூட அவனை தீவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரிக்கிறது இன்றைய ஊடகங்கள். ஏன் இந்த இரட்டை நிலைபாடு? என்று திருந்தப்போகிறதோ இந்த ஊடக உலகம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.