ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

துறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம் துவக்கம்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஐந்து இடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டினை நிறைவேற்ற வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது.சென்னை துறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறும் வகையில் தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. ஜும்மாக்களில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், சுவரொட்டிகள், மக்கள் கூடும் இடங்களில் பேனர் வைப்பது, மெகா ஃபோன் மூலமாக இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்றவற்றின் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி அன்று சென்னை மண்டலம் சார்பாக மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணி தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாஸ்கான் சாவடி மஸ்ஜித் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.