ஞாயிறு, 13 மே, 2012

ஆளை மாற்றினாலும் தக்லீதை விடுவதாக இல்லை

முஸ்லிம்களில்  மார்க்கம் என்ற பெயரில் யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஸ்லாமிய மர்க்கத்தை என்னதான் குர்ஆன், ஹதீஸ் கொண்டு விளக்கினாலும், எடுத்துக் கொடுத்தாலும் விரல் விட்டு என்ணும் அளவிற்கு ஒரு சிலரைத் தவிர எஞ்சியவர்கள் யாரையாவது ஒருவரை சார்ந்து நிற்பதையே வழமையாக்கிக் கொள்கிறார்கள். தெளிவாகச்  சொன்னால் ஆளை  மாற்றுகிறார்களே தவிர “தக்லீதை விடுவதாக இல்லை.
நாம் விரும்புவதாக இருந்தாலும், மறறவர்கள் விரும்புவதாக ருந்தாலும், அதற்கேற்றவாறு ஒருவர் குர்ஆன், ஹதீஸுக்கு சுய விளக்கம் கொடுத்தால் அது நேர்வழியாகிவிடாது. அதற்கு மாறாக குர்ஆன், ஹதீஸை நமக்கு  விளங்கும் வகையில் சொல்ல வேண்டும். மற்றபடி அவரது சுய விளக்கத்தின்படி நாம் அரை குறையாக விளங்குவதாக இருக்கக்கூடாது. ஒரு வேளை அவர் சொல்வது நமக்கு தெளிவாக புரியவில்லை. ஆனால் அவர் ரொம்ப படித்தவர், அறிந்தவர், பெரிய பேச்சாளர் அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவரை  நம்பி அதைச் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிச் செயல்படுவது கண்மூடி பின்பற்றுவதாகும்.
அரபி படித்த பண்டிதர்களே மார்க்கத்தை விளங்க முடியும் என்ற அய்யாமுல் ஜாஹிலியத் நம்பிக்கையை உங்களின் காலுக்குக் கீழ் போட்டு மிதித்து விடுங்கள். இது உண்மையானால் அபூஜஹீலும், அவனைச் சார்ந்த தாருன்நத்வா உலமா பெருமக்களுமே அன்று குர்ஆனை மிகத் தெளிவாக விளங்கி இருக்க வேண்டும். அதற்கு மாறாக அரபி கசடறக் கற்ற அந்த அரபி பண்டிதர்கள் அல்குர்ஆனை விளங்க முடியவில்லை.
அதே சமயம் எழுதப் படிக்க தெரியாத சாதாரண மக்கள் அல்குர்ஆனை விளங்கி ஈமான் கொண்டு உன்னத பதவிகளை அடைந்தார்கள். இது தெளிவான ஆதாரப்பூர்வமான வரலாறு ஆகும். இதனை நன்கு ஞாபகத்தில் வைத்து வீண் பிதற்றலுக்கு செவி சாய்க்காதீர்கள். இதைப் படிக்காதீர்கள், அதைப் படிக்காதீர்கள், குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது அதற்கு பல கலைகள் தெரிந்து இருக்கவேண்டும் என்றும் பிதற்றுவார்கள்.
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம் (அல்குர்ஆன்  29:69)
அல்குர்ஆன் வசனங்களையும், ஆதரப்பூர்வமான ஹதீஸ்களையும் உங்கள் முன் எடுத்து வைத்துவிட்ட மாத்திரத்தில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உங்களுக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஹதீஸ்களைப் பார்த்து விளங்கிச் செயல்படும் கடமை உங்கள் மீது உள்ளது. அதற்கு முன்பும் இக்கடமை ருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்போது குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை நேரடியாக பார்த்துவிட்டதால், அந்தக் கடமை உங்கள் மீது  இன்னும் அழுத்தமாக ஏற்ப்பட்டு விட்டது. இதற்குப் பிறகும் குர்ஆன், ஹதீஸ் படி செயல்படுவதும், செயல் படாதிருப்பதும் உங்களைச் சார்ந்ததேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.